15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்! சுவிஸில் இருந்து டென்மார்க் வரை

#Switzerland #swissnews
Mayoorikka
1 week ago
15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள்! சுவிஸில் இருந்து டென்மார்க் வரை

டென்மார்க்கில் 15 ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு இடம்பெறவுள்ளது.

 இந்த நிகழ்வில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரவேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு இடம்பெற உள்ளது.

 18. 5. 2024 சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு paladspassagen ved anlæget 12c 7100 vejle denmark என்ற இடத்தில் குறித்த வீரவணக்க நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 குறித்த வீரவணக்க நிகழ்வில் கலந்து கொள்வோருக்கான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால் இணைந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் வரவை 10. 5 . 2024க்கு முன்னர் பதிவு செய்து கொள்ளவும்.

images/content-image/2024/04/1714043594.jpg

 17 . 5. 2024 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சூரிச் தொடர்ந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள SIHLGUAI பேருந்து தரிப்பிடத்தில் இருந்து புறப்படும். 

19 .5. 2024 பகல் சூரிச்சை வந்தடையும் இந்த நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு இன உணர்வுடன் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு வணக்கம் செலுத்த ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விடுதலைப் புலிகளை இயக்கத்திற்கு சுவிச்சர்லாந்திலே 2009 ஆம் ஆண்டுக்கு முற்பாடாக முழுமையாக முழு நேரமாக உழைத்த ஒரு சிலரால் இந்த பதாகை வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையிலே இந்த பதாகையை லங்கா4 ஊடகமும் வெளியிடுகிறது.