வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு

Nila
5 years ago
வவுனியாவில் பாடசாலை மாணவன் மர்மமாக உயிரிழப்பு

வவுனியா - தோணிக்கல் பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

தோணிக்கல், லக்சபான வீதி பகுதியைச் சேர்ந்த 15 வயதான உதயசந்திரன் சஞ்சீவ் என்ற விபுலானந்த கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இரவு, தனது பெற்றோருடன் வீட்டில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று செவ்வாய்க் கிழமை காலை, மகனை தூக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அவரது பெற்றோர் படுக்கையைப் பார்த்தபோது மகனைக் காணவில்லை.

இதன்பின்னர் மகனைத் தேடிய போது வீட்டின் வெளிப் பகுதியில் காயங்களுடன் சடலமாக கிடப்பதை அவர்கள் கண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பாக அறிந்து அந்த இடத்திற்கு வருகைதந்த தடயவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4