செம்மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இது அவசியம் இல்லை - பிரித்தானியா அறிவிப்பு

Nila
4 years ago
செம்மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு இது அவசியம் இல்லை - பிரித்தானியா அறிவிப்பு

செம்மஞ்சள் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ள நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு வரும் பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்டபட வேண்டிய அவசியம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் கிறேன்ட் ஷாப்ஸ் இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்த நடைமுறைச் சாத்தியம் எதிர்வரும் 12 ஆம் திகதி எடுக்கப்படும் முடிவுகளிலேயே தங்கியுள்ளது. இங்கிலாந்தில் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கான தனிமைப்படுத்தல் விதிமுறைகளுகளில் போக்குவரத்துத்துறை அமைச்சர் கிறேன்ட் ஷாப்ஸ் மாற்றங்களை அறிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் செம்மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து வரும், தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொண்ட பயணிகள் தனிமைப்படுத்தப்பட தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் இவ்வாறு பயணிப்பவர்கள் நாட்டுக்கு வருகைதரும் போது மற்றும் திரும்பிச் செல்லும் போதான கொரோனா தொற்று பரிசோதனைக்கான கட்டணத்தை செலுத்த வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 18 வயதிற்குட்பட்ட செம்மஞ்சள் பட்டியலில் உள்ள நாடுகளிலிருந்து திரும்புபவர்களுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக ஷாப்ஸ் நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

இந்த நகர்வு சாதகமானது என சுட்டிக்காட்டியுள்ள போக்குவரத்துத்துறை தலைவர்கள், எனினும் செம்மஞ்சள் பட்டியல் மேலும் விரிவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

எவ்வாறெனினும் இந்த திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் சிவப்பு மற்றும் செம்மஞ்சள் பட்டியல் நாடுகளிலிருந்து வருபவர்கள் கட்டாயம் 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4