யாழில் விபத்து - மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி மற்றும் 2 வயது சிறுமி உட்பட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை

Nila
4 years ago
யாழில் விபத்து - மோட்டார் சைக்கிளில் சென்ற கர்ப்பிணி மற்றும் 2 வயது சிறுமி உட்பட்ட மூவருக்கு ஏற்பட்ட நிலை

கரந்தன் – ஊரெழு பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள்-ஹன்ரர் வாகனம் மோதியதில் இரண்டு பெண்கள் காயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (10 ) முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஞானவைரவர் வீதி ஒழுங்கை ஊடாக மோட்டார் சைக்கிளில் வைத்தியசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது கரந்தன் -ஊரெழு பிரதான வீதியில் திடீரென ஏறியபோது எதிரே வந்த ஹன்ரர் வாகனத்தல் மோதியதால் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கீழே விழுந்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிள் ஹன்ரர் வாகனத்தின் பவரில் கொழுவியதால் இழுத்துச் சென்று அருகில் உள்ள வீட்டின் மதிலை உடைத்து பாய்ந்து விபத்துக்குள்ளானது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று பெண்களில் ஒரு பெண் 8 மாத கர்ப்பிணிப் பெண் என்பதுடன் 2 வயது சிறுமியும் பயணித்துள்ளனர். காயமடைந்த இரண்டு பெண்கள் உடனடியாக அம்புலன்ஸ் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 2 வயது சிறுமி காயங்களின்றி தப்பியுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4