கொழும்பை அண்டிய பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித்திரியும் கொரோனா நோயாளிகள்!

Nila
4 years ago
கொழும்பை அண்டிய பகுதிகளில் பொது இடங்களில் சுற்றித்திரியும் கொரோனா நோயாளிகள்!

பாணந்துறை சுகாதார அலுவலர் பிரிவில் கொரோனா தொற்று நோயாளர்கள் அதிகளவில் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு எவ்வித அடையாளங்களும் இல்லாத காரணத்தினால், இப்பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

 பொது சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பிற சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவடைந்து பல நாட்கள் ஆகிவிட்டாலும், அப்பகுதியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று பொது சுகாதார ஆய்வாளர்கள் பார்வையிடவில்லை என்றும் அப்பகுதியில் வசிப்போர் கூறுகின்றனர்.

 இதேவேளை, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அப்பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4