முல்லைத்தீவில் காணாமல் போன சிறுவன் மீண்டும் வந்தது எப்படி ? பேய் மீது சந்தேகம்

Nila
4 years ago
முல்லைத்தீவில் காணாமல் போன சிறுவன் மீண்டும் வந்தது எப்படி ? பேய் மீது சந்தேகம்

மாங்குளம் – துணுக்காய் வீதி, உதயசூரியன் நகர் பகுதியில், நேற்று முன்தினம் (10) இரவு காணாமல் போயிருந்த 14 வயது சிறுவன், நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளார்.

இது குறித்து கருத்துரைத்த சிறுவன், தான் குளிக்க சென்றவேளை யாரோ தன்னை கூப்பிட்டது போல இருந்ததாகவும் அதனால், தான் காட்டுக்குள் சென்று விட்டதாகவும் கூறினார்.

‘இதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. அதன் பின்னர், கொக்காவில் காட்டுப்பகுதியில் வெளியேறினேன்.

மேலும், என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. எவ்வாறு காட்டிற்குள் சென்றேன் என்றும் தெரியாது’ என்றும் சிறுவன் கூறினார்.

குறித்த காட்டுப்பகுதியில் காட்டு பேய் இருப்பதாக, பிரதேச மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4