நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி உயிரிழப்பு

Nila
3 years ago
நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி உயிரிழப்பு

ரஹ்மான் கே.பாலச்சந்தர் இயக்கிய புதுபுது அர்த்தங்கள் திரைப்படத்தில் அற்புதமாக நடித்து.

தமிழ் நெஞ்சங்களில் இடம் பிடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

கதாநாயகனாக நடித்து வந்த ரகுமான், பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு, அஜித் நடித்த பில்லா திரைப்படத்தில் வில்லனாக நடித்து அசத்தினார்.

இந்நிலையில் நடிகர் ரகுமானின் தாயார் சாவித்ரி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 84. இன்று மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.

அம்மாவை நினைத்து உருகும் பிரபலங்கள் சாவித்ரியின் இறுதிச் சடங்கு நாளை வியாழக்கிழமை காலை கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்திலுள்ள நிலம்பூரில் நடைபெற உள்ளது.

இவருக்கு டாக்டர். ஷமீம் என்ற மகளும் உள்ளார்.

ரஹ்மானுக்கு திரைப்பிரபலங்கள் பலர் ஆறுதல் கூறி வருகின்றனர்.