ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது?

Nila
3 years ago
ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது?

ஒரு வீட்டில் பூஜை, புனஸ்காரங்கள் செய்வதும், பூஜையறையில் விளக்கு ஏற்றி வைப்பதும், பெண்கள் தான். இது காலம் காலமாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 

ஆண்கள் ஏன் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது?

விளக்கில் எரியும் ஜோதி தான் உண்மையான கடவுள் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. எந்த ஒரு வீட்டில் தினமும் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி வழிபடுகிறார்களோ? அந்த வீட்டில் நிம்மதியும், செல்வ வளமும் நிறைந்து காணப்படும். 

அப்படியிருக்க விளக்கை ஆண்கள் ஏற்றுவதில் என்ன தவறு உள்ளது? ஆண்கள் விளக்கு ஏற்றினால் பலன் கிடைக்குமா? ஏன் ஆண்கள் விளக்கு ஏற்றக்கூடாது என்று கூறுகிறார்கள்? என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

விளக்கு என்பது மகாலட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. அதில் ஏற்றப்படும் தீபமானது எம்பெருமான் ஈசனை குறிக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் மகாலட்சுமியாக இருப்பதால், அவர்களுடைய கைகளால் தீபம் ஏற்றும் பொழுது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து, செல்வ வளத்தை வாரி வழங்குகிறாள். 

ஜோதியை ஒளிர விட்டு ஈசனை துதிப்பதால் நம் வாழ்க்கையில் இருக்கும் அத்தனை துன்பங்களும் நீக்கப்படுகிறது. இதனை தினமும் காலை, மாலை என இருவேளையும் செய்பவர்களுக்கு கட்டாயம் ஈசனின் அருள் கிடைக்கும். 

இதுதான் நம் முன்னோர்கள் வழி வழியாகக் கடைபிடித்து வந்த ஒரு விஷயம். ஆனால் இப்பொழுது இதனை பலரும் பின்பற்றுவது கிடையாது அதனால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு என்று நிம்மதி இழந்து காணப்படுகிறோம். 

ஐயனையும், அம்மையையும் தினமும் விளக்கு ஏற்றி வைத்து ஒரு பெண் வழிபடுவதால் வீட்டில் எந்த ஒரு கஷ்டமும், துன்பமும் ஏற்படாது. பணப்பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது. இதனால் மனதில் நிம்மதியும், சந்தோஷமும் எப்போதும் இருக்கும். 

எந்த வீட்டில் இதனை செய்ய தவறுகிறார்களோ அந்த வீட்டில் சண்டை சச்சரவுகளும், மனதில் தேவையில்லாத சஞ்சலமும் ஆட்கொள்ளும். மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாயும். வருமான தடை, தொழில் விருத்தி இன்மை போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வாய்ப்புள்ளது. 

 ஆண்கள் பொதுவாக வீட்டில் இருப்பதில்லை. மனதில்; ஆயிரம் பிரச்சனைகளை சுமந்து கொண்டு, பல இடங்களில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வருவார்கள். அவர்களிடம் தெளிவான சிந்தனையும், பக்தியில் நிலைக்கக்கூடிய மனமும் இருப்பதில்லை. இந்த சூழ்நிலையில் ஆண்கள் விளக்கு ஏற்றினால், எந்த ஒரு பலனும் கிடைக்காது. 

விளக்கு ஏற்றும் பொழுது முழு ஈடுபாட்டுடனும், பக்தி சிரத்தையுடனும், இறை சிந்தனையுடனும் ஏற்ற வேண்டும் அப்போது தான் அதற்குரிய முழு பலனையும் அனுபவிக்க முடியும். இந்த காரணத்தினால் தான் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றக்கூடாது என்று சொல்லப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!