இலங்கையில் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

Nila
4 years ago
இலங்கையில் பெண்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

அண்மைக் காலமாக ஆபாசத்திற்கும் இலங்கைக்கும் பலதரப்பட்ட வகையில் தொடர்புபட்ட செய்திகள் வெளிவந்த்த வண்ணமுள்ளன.

ஆபாசத்தளங்களை பார்வையிடுவோர் வரிசையில் இலங்கையும் அதிக எண்ணிக்கையை கொண்டுள்ளமை யாவரும் அறிந்த தகவலே.

இது இவ்வாறிருக்க, இலங்கையில் இணையத்தளங்கள் ஊடாக தகாத தொழிலுக்காக விற்பனை செய்வதற்கு சுமார் 27000 பெண்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியிருக்கின்றது.

இவர்களில் பலரும் நடத்தைப் பிறழ்வான தொழிலில் ஈடுபட்டு வருபவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அவர்களில் சிலர் தனியார் துறை மற்றும் அரச துறைகளில் தொழில் புரிந்து ஓய்வு நேரங்களில் இவ்வாரான தகாத தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் பலரும் கொழும்பு உட்பட மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், குறைந்த வயது யுவதிகள் தொடக்கம் 40, 45 வயதுக்கு இடைப்பட்டவர்களும் இதில் காணப்படுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

அண்மையில் சிறுமி ஒருவரை இணையத்தளத்தினூடாக பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து ஆபாசம் தொடர்பில் இலங்கையில் நடாத்தப்பட்ட ஆய்வறிக்கையினூடாகவே இவ்வாறான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4