விமானியாக முதற்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்த முதல் தமிழ்ப் பெண்

Nila
4 years ago
விமானியாக முதற்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்த முதல் தமிழ்ப் பெண்

மன்னார் மாவட்டத்தை சேர்ந்த இமானுவேல் எவாஞ்சலின் முதலாவது பெண் விமானியாக முதல்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்துள்ளார்.

இமானுவேல் எவாஞ்சலின்மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் வட்டக்கண்டல் காத்தான்குளம் கிராமத்தில் பிரான்சிஸ் இமானுவேல் தாசிலம்மா தம்பதியினருக்கு 1999 மகளாக பிறந்த இவர் பாடசாலைக் கல்வியை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் உயர்தரம் வரை நிறைவு செய்துள்ளார்.

சிறுவயது முதல் விமானியாக வரவேண்டும் என்ற இலக்கினை அடைவதற்காக சென்ற வருடம் (2020) ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள ஆசிய விமான நிலையத்தில் இணைந்து (Asian Aviation center Colombo Airport) முதல்கட்ட பயிற்சியினை (PPL Stage) நிறைவு செய்துள்ளார்.

இன்னும் இரண்டு வருடங்களில் அனைத்து பயிற்சிகளையும் நிறைவு செய்து முழு விமானியாக வெளிவர உள்ளதாக மன்னார் மாவட்டத்தின் முதலாவது பெண் விமானி என்று பெயர் எடுத்து மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் செயல்பட்டு வரும் இமானுவேல் எவாஞ்சலின் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4