பக்தர்கள் புனிதமாக கருதும் திருக்கயிலாய மலை

Nila
3 years ago
பக்தர்கள் புனிதமாக கருதும் திருக்கயிலாய மலை

இமயமலை உள்ள கயிலை மலைதொடரில் உள்ள ஒரு புகழ் பெற்ற பர்வதம் ஆகும்.

இதன் உயரம் 6,638 மீ. இம்மலையில் இருந்துதான் பெரும் சிந்து நதி, சட்லெச்சு ஆறு, காக்ரா ஆறு மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் உற்பத்தியாகிறது.

இதனருகே புகழ் பெற்ற மானசரோவர் நன்னீர் ஏரியும், இராட்சதலம் எனும் உப்பு நீர் ஏரியும் உள்ளது.

மானசரோவர் ஏரி உலகிலேயே மிக உயரத்தில் உள்ள நன்னீர் ஏரியாகும். இங்கு வரும் யாத்திரிகர்கள் இந்த ஏரியில் புனித நீராடுவது வழக்கம்.

இந்த கயிலை பர்வதத்தின் அடிவாரத்தைச் சுற்றி வலம் வருவதைத்தான் பக்தர்கள் புனித கடமையாகக் கருதுகிறார்கள்.

52 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பயணிக்க குறைந்தபட்சம் 15 மணி நேரம் ஆகும்.