நோர்வேயில் பூமியை நோக்கி வந்த விண்கல் - விழுந்ததா இல்லையா - ஆரம்பமாகியது ஆராய்ச்சி

Nila
4 years ago
நோர்வேயில் பூமியை நோக்கி வந்த விண்கல் - விழுந்ததா இல்லையா - ஆரம்பமாகியது ஆராய்ச்சி

வழக்கத்திற்கு மாறான ஒரு பாரிய விண்கல் ஒன்று நோர்வே தலைநகர் ஒஸ்லோவுக்கு சற்று தொலைவில் பூமியை நோக்கி வந்துள்ளது.

இது வித்தியாசமான சத்தத்துடனும் பிரகாசமான ஒளியுடனும் வானிலிருந்து வந்ததை அவதானித்துள்ளனர்.

இதுகுறித்த விரிவான தகவல்கள் எதுவும் வெளிவராத நிலையில் காயங்கள் அல்லது பாதிப்புக்கள் குறித்தும் தெரிவிக்கப்படவில்லை.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒரு மணியளவில் இந்த விண்கல் வானில் தென்பட்டதாக  தெரிவிக்கப்படுகின்றது.

எங்கிருந்து வந்தது மற்றும்     அதன் தோற்றம் குறித்த ஆய்வுகளை வீடியோ ஆதாரங்களை கொண்டு நோர்வே விண்கல் ஆராய்ச்சி நிலையம் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பூமியில் மரம் அல்லது பலகைக் கொண்ட பகுதியில் குறித்த விண்கல் வீழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

விண்கல் வீழ்ந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விண்கல் செக்கனுக்க 15 தொடக்கம் 20 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்துள்ளது.அத்துடன் விண்ணில் ஐந்து தொடக்கம் ஆறு செக்கன்கள் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4