இந்தியாவில் வீட்டு பிராணிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி

இந்தியாவில் வீட்டு பிராணிகளுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி

மதுரையில் வீட்டில் நாய், மாடு வளர்த்தால் ரூ.10 வரி செலுத்த வேண்டும் என மதுரை மாநகராட்சி கூறியுள்ளது.

தெருவில் வீட்டு நாய் மற்றவர்களை அச்சுறுத்தினால் அசுத்தம் செய்தால் உரிமையாளருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது.

இறைச்சி கடை, பிரியாணி விற்பனை நிலையத்திற்கு ஆண்டு உரிமம் சதுரடிக்கு ரூ.10. மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் நாய், மாடு, எருமை, குதிரை வளர்த்தால் ஆண்டுக்கு ரூ.10 வரி வசூலிக்கப்படும்.

அனுமதிக்கப்படாத இடங்களில் விற்பனைக்காக ஆடு, மாடு வதை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. திட்டக்கழிவுகளை தெருக்களில் கொட்டும் இறைச்சிக் கடைகளுக்கு ரூ.2,000 அபராதம் வசூலிக்கப்படும் எனவும் கூறியுள்ளது.

மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன்படி மாநகரில் இயங்கும் இறைச்சி-மீன் கடைகளை ஒழுங்குபடுத்தவும், அங்கு சுகாதார முறையில் இறைச்சி-மீன்களை விற்பனை செய்வதை உறுதி செய்யவும் அவர்களுக்கு புதிய உரிம முறையை அமல்படுத்தி இருக்கிறார்.

தற்போதைய நிலையில் மாநகராட்சி பகுதியில் தொழில் புரிபவர்களுக்கு தொழில் உரிமம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த உரிமத்தை இறைச்சி-மீன் கடைகள் பெறுவதில்லை. அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு சாலைகள் மற்றும் வாய்கால்களில் கழிவுகளை கொட்டி சுகாதார கேடு ஏற்படுத்துவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.