இலங்கையில் கொரோனாவுக்கு 118 பேர் பலி

Nila
4 years ago
இலங்கையில் கொரோனாவுக்கு 118 பேர் பலி

நாட்டில் நேற்று (09.08.2021) கொரோனாவுக்கு மேலும் 118 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இன்றையதினம் 2,904 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,340 ஆக உயர்வடைந்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதிப்படுத்தப்பட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், 30 க்கும் 59 க்கும் இடைப்பட்ட வயதுடைய 15 ஆண்களும் 2 பெண்களுமாக 17 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 64 ஆண்களும் 37 பெண்களுமாக 101 பேரும் கொரோனா தொற்றால் மரணித்துள்ளனர்.

இந்நிலையில், இலங்கையில் நாளொன்றில் பதிவான அதிக கொரோனா மரணங்கள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4