11.08.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: நினைத்தது நிறைவேறும். பணவரவு சரளமாக இருக்கும்.
பரணி: குடும்ப உறவுகள் பலப்படும். மனதில் குதுாகலம் நிறையும்.
கார்த்திகை 1: நெருக்கடி தந்து கொண்டிருந்த பிரச்னை தீர ஆரம்பிக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: உறவினருடன் நல்லிணக்கம் வரும். வேலை பளு குறையும்.
ரோகிணி: சேமிப்பிலிருந்து ஒரு தொகையைப் பிறருக்குத் தருவீர்கள்
மிருகசீரிடம் 1,2: அலுவலகத்தில் இயல்பான நிலையே தொடரும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: நண்பர்கள் தாமாக முன்வந்து உதவி செய்வார்கள்.
திருவாதிரை: தொழிலில் இருந்த இக்கட்டான சூழ்நிலைகள் விலகும்.
புனர்பூசம் 1,2,3: தாமதமாகி கொண்டிருந்த ஒப்பந்தம் நல்லபடியாக நிறைவேறும்.
கடகம்:
புனர்பூசம் 4: தொழிலில் இருந்த முடக்க நிலை மாறும். மகிழ்ச்சி கூடும்.
பூசம்: நிதி நிலையில் சிறு முன்னேற்றத்தைக் காணலாம்.
ஆயில்யம்: எண்ணம் ஒன்று நிறைவேறும். சிறியோர் உங்களை மதிப்பார்கள்.
சிம்மம்:
மகம்: முயற்சி சாதகமான திசையில் இருக்கும். மன அமைதி உண்டு.
பூரம்: வளர்ச்சி அமோகமாக இருக்கும். வங்கிக் கடன் கிடைக்கும்.
உத்திரம் 1: அலுவலகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக இருக்கும்
கன்னி:
உத்திரம் 2,3,4: மனதில் தேவையற்ற எண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள்.
அஸ்தம்: பேச்சுவார்த்தை சாதகமாக இருக்கும். நல்ல செய்தி கிடைக்கும்.
சித்திரை 1,2: பெண்களுக்கு உதவிகள் கிடைக்கும். சச்சரவு தீரும்.
துலாம்:
சித்திரை 3,4: செலவு ஏற்படும். மதியத்துக்கு பிறகு பணிச்சுமை அதிகரிக்கும்.
சுவாதி: நெருக்கடியான நிலை தோன்றிய வேகத்தில் மறையும்.
விசாகம் 1,2,3: நிதானமான போக்குடன் நிலைமையைச் சமாளிப்பீர்கள்.
விருச்சிகம்:
விசாகம் 4: பாக்கிகள் வசூலாகும். தொழில் தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
அனுஷம்: பணியிட சிக்கலைச் சமாளிக்கும் ஆற்றல் உண்டாகும்.
கேட்டை: புதிய தொழில் தொடங்குவது பற்றிய சிந்தனை உருவாகும்
தனுசு:
மூலம்: கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும். பிரச்னை முடிவுக்கு வரும்.
பூராடம்: வாழ்வில் முன்னேறுவதற்கான சிந்தனை வலுப்பெறும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த நிகழ்வு நடப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: நண்பர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் அகலும்.
திருவோணம்: எதையும் மன உறுதியோடு எதிர்கொள்வீர்கள்.
அவிட்டம் 1,2: அலுவலகப் பிரச்னைகள் முடிவுக்கு வரும். ஒற்றுமை நீடிக்கும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: இழந்த பொறுமையையும் நிதானத்தையும் கைக்கொள்வீர்கள்.
சதயம்: தொடர்பு இல்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
பூரட்டாதி 1,2,3: உங்களின் பேச்சால் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.
மீனம்:
பூரட்டாதி 4: அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
உத்திரட்டாதி: தாய்வழி உறவினருக்காக ஓரிரு செலவுகள் ஏற்படக்கூடும்.
ரேவதி: வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்து செல்வது நல்லது.