இலங்கையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒரு மாதத்தை கடந்த போராட்டம்-தீர்வு என்ன?

Yuga
4 years ago
இலங்கையில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் ஒரு மாதத்தை கடந்த போராட்டம்-தீர்வு என்ன?

இலங்கையில் ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கும், இணையவழி கற்பித்தல் பணிப்புறக்கணிப்பு தொழிற்சங்க நடவடிக்கை, இன்றுடன் ஒரு மாதத்தை அடைகின்றது.

குறித்த போராட்டமானது, வேதன பிரச்சினையை முன்வைத்து, ஆசிரியர் மற்றும் அதிபர்கள் இந்த தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆசிரியர் சங்கங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை அரச மற்றும் தனியார் தொழிற்சங்கங்கள் சிலவற்றுடன் கலந்துரையாடைலை முன்னெடுத்திருந்தன.

அதன்படி, தங்களது தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி, ஆசிரியர் சங்கங்கள் இந்த கலந்துரையாடலை நடத்தியுள்ளன.

இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

மேலும், ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளைய தினம் சத்தியாகிரக போராட்டம் ஒன்றினை மேற்கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு தாமதமான நிலையில், மாணவர்கள் இணையவழி கற்கையும் இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4