இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கான சிகிச்சை அளிக்கும் முறை அறிவிப்பு!

Yuga
4 years ago
இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கான சிகிச்சை அளிக்கும் முறை அறிவிப்பு!

இரண்டு வயதுக்கு மேற்பட்ட கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு தமது வீடுகளிலேயே தங்க வைத்து சிகிச்சை வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் டொக்டர் ஷன்ன டீ சில்வா தெரிவிக்கின்றார்.

இதன்படி, நோய் அறிகுறிகள் தென்படாத மற்றும் சிறு நோய் அறிகுறிகள் தென்படுகின்ற சிறார்களை வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்துமாறு வைத்தியர்கள் கோரியுள்ளனர்.

தொற்றா நோய் மற்றும் நீண்ட கால நோய்களுக்காக சிகிச்சைகளை பெறாத சிறுவர்களுக்கே இவ்வாறு வீடுகளில் சிகிச்சை வழங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கை, வெகுவாக அதிகரித்துள்ள நிலையிலேயே, இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

வீடுகளில் சிகிச்சை பெறும் சிறார்களை அவதானித்துக்கொள்ள வேண்டியது, வீட்டிலுள்ள மூத்தவர்களின் பொறுப்பு என்பதுடன், தொலைபேசியூடாக வழங்கப்படும் ஆலோசனைகளுக்கு அமைய சிகிச்சைகளை வழங்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கொவிட் தொற்றுக்குள்ளாகும் சிறார்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் வகையிலான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக 1390 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4