தடையின் பின் போயிங் 737மக்ஸ் விமானம் சீனாவில் பரீட்சார்த்த பயணத்தில்...

தடையின் பின் போயிங் 737மக்ஸ் விமானம் சீனாவில் பரீட்சார்த்த பயணத்தில்...

போயிங் 737மக்ஸ் விமானம் சீனாவில் தற்போது இரண்டரை வருட தடையின் பின் பறக்க விருக்கிறது. அமெரிக்க தயாரிப்பான இவ்விமானம் தனது பரிட்சார்த்த பயணத்தை இன்று புதன்கிழமை 9.24மணி காலை சங்காய் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தெற்கு நோக்கி புறப்பட்டததை ஓர் இணையத்தளம் சுட்டிக்காட்டியது.

இந்த 737மகஸ் விமானம் சியட்டிலை கடந்த கிழமை விட்டு சங்காய் விமானநிலையத்தை ஆகஸ்ட் 7 வந்தடைந்தது. இது தனது கன்னிப்பரிட்சார்த்த பயணத்தை இன்று எல்லாம் சரியாக வந்தால் பயணிக்கும்.

சுமார் 30 எயர்லயின் நிறுவனங்கள் மற்றும் 175நாடுகள் இந்த 737மகஸ் விமானத்தை சேவையில் ஈடுபடுத்த சுமார் இரண்டரை வருடங்களின் பின் அனுமதித்துள்ளது.

சீனாவிற்கான இவ்விமானத்தின் விற்பனையில் வீழ்ச்சியானது அமெரிக்க - சீன பொருளாதார சிக்கல் காரணமாக குறைந்திருந்தபோதிலும் இவ்வருடத்திற்குள் இதற்கான அனுமதி கிடைத்துவிடும் என நிறைவேற்று அதிகாரி டேவ் கல்ஹான் தெரிவித்தார்.

மேலும் சீனாவிற்கான விமான கட்டுப்பாடு அலுவலகம் 737மக்ஸ்க்கான வடிவமைப்பு, போதியளவு விமானி பயிற்சி, மற்றும் விபத்து காரணி அறிதல் போன்றவற்றில் தமது தேவைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4