இலங்கையில் சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிப்பு

Yuga
4 years ago
இலங்கையில் சமையல் எரிவாயு விலை திடீரென அதிகரிப்பு

லாப்ஃஸ் சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலைகளை அதிகரிக்க நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, லாப்ஃஸ் 12.5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 363 ரூபாயினாலும்  5 கிலோ கொள்கலனின் விலை 145 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ லாப்ஃஸ் எரிவாயு கொள்கலனின் விலை ஆயிரத்து 856 ரூபாயாகவும் 5 கிலோ எரிவாயு கொள்கலனின் விலை 743 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4