யாழ்ப்பாண கணவாய் கறி
Mugunthan Mugunthan
3 years ago
தேவையான பொருள்கள்
- கணவாய் மீன் - அரை கிலோ
- வெங்காயம் - 2
- தக்காளி -2
- இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2ஸ்பூன்
- மிளகுத்தூள் - கால்ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரைஸ்பூன்
- மல்லிதுர்ள் - 1 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்
- சீரகத்தூள் - அரை ஸ்பூன்
- எண்ணெய் - 2 ஸ்பூன்
- கடுகு - 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிதளவு
- உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கணவாய் மீனை சுத்தம் செய்து பலமுறை கழுவுங்கள்.
- கழுவியதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து பிசறி வையுங்கள்.
- வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
- கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கருவேப்பிலை, போட்டு தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
- பிறகு இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வாசனை போக வதக்கி தக்காளி சேர்த்து அதனுடன் உப்பும் சேர்த்து வதக்கவும்.
- தக்காளி வதங்கி வரும்போது அனைத்து தூள் வகைகளையும் சேர்த்துக் கிளரி அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- பின் அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் கணவாய் மீனை சேர்த்து நன்றாக பிரட்டி ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும்.
- கணவாய் மீன் வெந்து தொக்கு பதத்துக்கு வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும்.
- சுவையான கணவாய் மீன் குழம்பு ரெடி