இலங்கையில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு கொரோனா மரணம்- வெளியான அதிர்ச்சி தகவல்

#Corona Virus #SriLanka
Yuga
4 years ago
இலங்கையில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒரு கொரோனா மரணம்- வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று முன்தினம் (10) இடம்பெற்றிருந்தது.

அரச தகவல் திணைக்களம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், இறுதியாக 124 கொரோனா மரணங்கள் பதவாகியதாக குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, தற்போது நாளாந்தம் இடம்பெறும் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 100ஐ கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழந்து வரும் நிலை உருவாகுமென நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக இந்நிலை தொடருமானால் ஒரு மணித்தியாலத்தில் 5 கொரோனா நோயாளர்கள் மரணமடையும் ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது.

இதேவேளை, நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,464ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத்தளபதி தெரிவித்தார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4