பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கழுத்தறுத்து கொடூர கொலை!!

Yuga
4 years ago
பிரான்சில் இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் கழுத்தறுத்து கொடூர கொலை!!

பரிஸ் புறநகர பகுதியான வால்துஓஸ் பிராந்தியத்தில் 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இரவுநேர பணிமுடித்து காலை 10 மணியளவில் வீடுதிரும்பிய இலங்கை பூர்வீகத்தை கொண்ட குடும்பத்தலைவர் தனது 52 வயதான மனைவியும் 21 வயதான மகளும் அவர்களது படுக்கை அறையில் கழுத்துகள் அறுக்கப்பட்டும் குத்தப்பட்டகாயங்களுடன் உடலங்களாக கண்டதையடுத்து இந்த குருரசம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டில் மிகவும் அதிர்ச்சியுற்ற நிலையில் காணப்பட்ட தந்தையும் இரண்டு ஆண் பிள்ளைகளும் காவற்துறையினரால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று முதலில் வெளியாகிய தகவல்கள் தெரிவித்தன.

புலம்பெயர்ந்து வசிக்கின்ற தமிழ் குடும்பத்தினரது வீட்டிலேயே இந்தக் கொலைகள் நிகழ்ந்துள்ளன. கொலையுண்டவர்களது பெயர் மற்றும் மேலதிக விவரங்கள் உடனடியாகத் தெரியவரவில்லை. வேலை முடிந்து இன்று காலை வீடு திரும்பிய தந்தையார் மனைவியும் மகளும் வீட்டு அறையில் கூரிய ஆயுதத்தால் ஏற்பட்ட காயங்களுடன் சடலமாகக் கிடப்பதைக் கண்டார் என்று கூறப்படுகிறது.

அயலவர்களால் அவசர மீட்புப் பிரிவிவினரும் காவற்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் தந்தையாரும் அவரது இரண்டு புதல்வர்களும் மிகவும் அதிர்ச்சியுற்றவர்களாகக் காணப்பட்டனர் என்றும் பின்னர் அவசர முதலுதவிப் பிரிவினரால் மூவரும் பொலிஸ் பாதுகாப்புடன் பொந்துவாஸ் மருத்துவமனைக்கு (centre hospitalier René-Dubos de Pontoise) கொண்டு செல்லப்பட்டனர்

     

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4