வருகின்ற ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு இந்த பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்தால் நீங்கள் வேண்டிய வரங்களை பெற முடியும்

வருகின்ற ஆடிப்பூரம் அன்று அம்மனுக்கு இந்த பாயாசத்தை நெய்வேத்தியமாக படைத்து பூஜை செய்தால் நீங்கள் வேண்டிய வரங்களை பெற முடியும்

அம்பாளுக்கு உரிய மாதம் ஆடி மாதம். ஆடி மாதம் சக்தியை கொண்டாடும் மாதமாகும். உலக மக்களை காத்தருள்வதற்காக உமையவள் அம்பிகையாக அவதரித்த நாள் ஆடிப்பூரம் என்று அழைக்கப்படுகிறது. மகாசக்தி தோன்றிய இந்த நாளில் தான் முனிவர்களும், தேவர்களும் தவம் மேற்கொண்டு அவர்களுக்கு வேண்டிய வரங்களை பெறுவார்கள்.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த நாளில் அம்பிகையையை வழிபட்டு வர உங்களுக்கு நல்ல பலன்கள் உண்டாகும். ஆடிப்பூரம் அம்பிகைக்கு பூஜை செய்யும்பொழுது ஜவ்வரிசி, பாசி பருப்பு பாயாசத்தை நெய்வேதியமாக படைப்பதன் மூலம் அம்பிகை மனமகிழ்ந்து உங்களுக்கு வேண்டிய வரங்களை அருள்வாள்.

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு – கால் கப்,
ஜவ்வரிசி – கால் கப்,
வெல்லம் – ஒரு கப்,
நெய் – இரண்டு ஸ்பூன்,
முந்திரி – 15,
திராட்சை – 10,
ஏலக்காய் – 3,
தேங்காய் துருவல் – முக்கால் கப்.
 செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்து கடாய் சூடானதும் அதில் கால் கப் பாசிப்பருப்பை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே கடாயில் கால் கப் ஜவ்வரிசி சேர்த்து அதனையும் நன்றாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதன் பின்பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசியை ஒன்றாக சேர்ந்து இரண்டு முறை தண்ணீர் விட்டு கழுவி கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரில் அவற்றை சேர்த்து அதனுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் நான்கு விசில்கள் வரும் வரை வேக வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் முக்கால் மூடி தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, திக்கான தேங்காய்ப்பால் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் ஒரு கப் வெல்லம், அரை கப் தண்ணீர் சேர்த்து வெல்லம் நன்றாக உருகும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும். உருகிய வெல்லக் கரைசலை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு சிறிய தாளிப்பு கரண்டியில் நெயசேர்த்து அதில் முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்றாக பொரித்துக்கொள்ள வேண்டும்.

- வேக வைத்துள்ள பாசிப்பருப்பு மற்றும் ஜவ்வரிசி உள்ள குக்கரை மீண்டும் அடுப்பின் மீது வைத்து அதனுடன் வெல்லக் கரைசலை சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். அவை நன்றாக கொதித்ததும் அவற்றுடன் முந்திரி, திராட்சை மற்றும் நசுக்கிய ஏலக்காய் சேர்த்து கிளறி, இறுதியாக தேங்காய் பாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் சிறு தீயிலேயே கொதிக்க விட்டு பின்னர் இறக்க வேண்டும். அம்பிகை வழிபாடு:

வீட்டில் உள்ள அம்பிகை படத்திற்கு சந்தன, குங்கும பொட்டு வைத்து செந்நிற மலர்கள் சூட்டி, ஆடிப்பூரம் அம்மனுக்கு வளையல் படைப்பது மிகவும் விசேஷம் என்பதால் வளையல்களை கோர்த்து மாலையாக அணிவித்து, செய்து வைத்துள்ள பாயாசாத்தினை நெய்வேத்யமாக படைத்து, அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். அதன்பின் வெற்றிலை, பாக்கு வாழை பழம், மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு இவற்றுடன் ஜாக்கெட் துணி அனைத்தையும் சேர்த்து சுமங்கலிப் பெண்களுக்கு தானமாக கொடுத்தால் அம்பிகையின் அருளை முழுவதுமாக பெற முடியும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!