நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதி விளக்கம்

#SriLanka
Reha
4 years ago
நாடு முடக்கப்படுமா? இராணுவத் தளபதி விளக்கம்

அலுவலக பணிகளுக்காக தேவையானவர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்க வேண்டுமென நிறுவன தலைவர்களிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி, நாட்டை முடக்க வேண்டாமென்றே பெரும்பான்மையானோர் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவித்தார்.

நிகழ்வுகளில் கலந்துகொள்வதை பொதுமக்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டுமெனவும், அலுவலகங்களில் பணியாளர்களில் தான் விரும்பியதுபோல வேலைக்கு அழைத்தால், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் எனவும், பணிக்குத் தேவைப்படுவோரை மாத்திரம் அலுவலகங்களுக்கு அழைப்பது நிறுவன தலைவர்களின் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் அதிகளவான ஊழியர்களை பணிக்கு அமர்த்தி வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும்  தற்போது பேச வேண்டியது நாட்டை முடக்குவது பற்றியல்ல. நாட்டை முடக்காத வகையில் செயற்படுவது பொதுமக்கள் அனைவரதும் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

நாட்டை முடக்க வேண்டாமென்றே பெரும்பான்மையானோர் கோரிக்கை விடுத்து வருவதாகவும், சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4