கிழக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்:09 மரணங்கள்பதிவு

#Corona Virus #Death
Reha
4 years ago
கிழக்கில் கடந்த 48 மணி நேரத்தில் 1354 தொற்றுக்கள்:09 மரணங்கள்பதிவு

கிழக்கு மாகாணத்தில் இதுவரை காலமும் கண்டிராத கொரோனாத் தொற்றுக்களின் பதிவு கடந்த இருதினங்களாக இடம்பெற்றுள்ளது.

கிழக்குமாகாணத்தில் வழமைக்குமாறாக கடந்த 48 மணிநேரத்தில் 1354தொற்றுகளும் ,09 மரணங்களும் ஏற்பட்டுள்ளன. டெல்டாவின் பிரசன்னமும் நிகழ்ந்துள்ளது. இது கிழக்கில் மற்றுமொரு பேராபத்து நெருங்குவதை கட்டியம்கூறிநிற்கிறது என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார்.

கிழக்குமாகாணத்திற்கென கிடைக்கப்பெற்ற 9லட்சம் தடுப்பூசிகளில் இதுவரை 8லட்சத்து 26ஆயிரத்து 434தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவிட்டன. அதாவது 80வீதமானோருக்கு முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுவிட்டன.

கடந்தசில நாட்களாக நாட்டின் ஏனைய மாகாணங்களில் சடுதியாக ஏற்பட்டுள்ள சடுதியான நோயாளர் மற்றும் மரணங்களின் அதிகரிப்பு கிழக்கு மாகாணத்திலும் ஏற்பட்டுவருவதைக்காணக்கூடியதாகவுள்ளது.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் அவதானத்துடன் சுகாதார வழி முறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்கவும் ,சமூக இடைவெளிகளை பேணுதல் ,முகக்கவசம் அணிதல் இகைகளை அடிக்கடி சவர்க்காரம் இட்டு கழுவுதல் போன்ற விடயங்களை அரசின் கட்டுப்பாடுகளுக்கு அமைய நடந்து கொள்ள வேண்டும்.

தடுப்பூசியைப் பெற்றுவிட்டோம் என்ற நினைப்பில் சுகாதாரநடைமுறைகளில் ஒருவித தளர்வை கடைப்பிடிப்பதாகவே பார்க்கிறோம். எனவே தயவுசெய்து அனைவரும் தொடர்ச்சியாக சுகாதாரநடைமுறைகளை இறுக்கமாகக்கடைப்பிடிக்க வேண்டும்.என்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4