மட்டகளப்பில் தாயை இழந்த மனவேதனையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

Reha
4 years ago
மட்டகளப்பில் தாயை இழந்த மனவேதனையில் இளம் யுவதி தூக்கிட்டு தற்கொலை

கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட சில்லிக்குடிஆறு காஞ்சிரங்குடா பிரதேசத்தைச்சேர்நத (15) வயதுடைய இளம் யுவதி பாக்கியராசா மாலினி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் இன்று  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தள்ளனர்.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த யுவதியின் தாயார் மரணமடைந்திருந்ததாகவும் தான் தனது தாயை இழந்துள்ளதாகவும் அதனால் தானும் தற்கொலை செய்யப்போவதாக நீண்ட நாட்களாக கூறிவந்த நிலையில் அவரின் வீட்டு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்தாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சம்ப இடத்திற்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்கு தடயவியல் பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4