இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள் − தடுப்பூசி அட்டையும் கட்டாயம்

#SriLanka
Reha
4 years ago
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் கட்டுப்பாடுகள் − தடுப்பூசி அட்டையும் கட்டாயம்

இன்று (13) நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அதனடிப்படையில் இன்று இரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்படுவதாகவும் எனினும், துறைமுகம், ஆடைத் தொழிற்சாலை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம்பெறும் எனவும்  தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் பொதுமக்களுக்கு முன் தடுப்பூசி அட்டை வழங்கப்படும் என்றும் அதன் பின்னர் அந்த அட்டையின்றி பொது இடங்களுக்கு செல்வது தடைசெய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, சுகாதார நெறிமுறைகள் அடங்கிய அறிவிப்புக்களுக்கமைய பொதுமக்களின் செயற்பாடுகள் கடுமையாக கண்காணிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4