14.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
14.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: மேலதிகாரியிடம் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைக்கும்

பரணி: பக்குவமாகப் பேசி நல்ல பெயர் சம்பாதித்துக் கொள்வீர்கள்.

கார்த்திகை 1: உறவினர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகளால் செலவு உண்டு.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: லாபம் கிட்டும் நாள். அதிகாரிகள் அனுகூலமாக நடந்து கொள்வர்.

ரோகிணி: குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

மிருகசீரிடம் 1,2: உங்களை குறை சொல்லியவர்கள் இன்று பாராட்டுவர்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: பிரிந்தவர்கள் உங்கள் முயற்சியால் வந்திணைவர்.

திருவாதிரை: குழப்பங்கள் தீரும். வரவேண்டிய பணம் வசூலாகும்.

புனர்பூசம் 1,2,3: எடுத்த முயற்சியில் வெற்றி கிட்டும். தொழில் வளம் உண்டு.

கடகம்: 

புனர்பூசம் 4: காலையில் வரும் செய்தி மகிழ்ச்சி தரும். பரபரப்பான நாள்.

பூசம்: அமைதி கூடும் நாள். பணியிடத்தில் நன்மை உண்டு.

ஆயில்யம்: சண்டை போட்டவர் உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்பு செய்வார்.

சிம்மம்: 

மகம்: வாழ்க்கைத்துணையின் உடல்நலம் சீராகி மகிழ்ச்சி தரும்.

பூரம்: கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

உத்திரம் 1: முதியோர் நலனில் ஆர்வம் காட்டுவீர்கள். மகிழ்ச்சி கூடும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: சிக்கல்கள் விலகி சிறப்படையும் நாள். உற்சாகம் கூடும்.

அஸ்தம்: சுணக்கம் காட்டிய செயல்கள் சுறுசுறுப்பாக நடைபெறும்.

சித்திரை 1,2: விட்டுப்போன வாய்ப்பு ஒன்று மீண்டும் வந்துசேரும்.

துலாம்: 

சித்திரை 3,4: நட்பு வட்டத்தில் நல்லவர், தீயவரை அடையாளம் காண்பீர்கள்.

சுவாதி: வாழ்க்கைத்துணை வழியே பணவரவு இன்று உண்டு.

விசாகம் 1,2,3: பெண்கள் ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.

விருச்சிகம்:

விசாகம் 4: நெருக்கமானவருடன் மனம் விட்டுப் பேசும் வாய்ப்பு கிட்டும்.

அனுஷம்: வழிபாட்டில் கூடுதல் ஈடுபாடு வரும். குடும்பம் விரிவடையும்.

கேட்டை: நினைத்த விஷயம் ஒன்றை முடிக்க நெருக்கமானவர்கள் உதவுவர்.

தனுசு: 

மூலம்: சந்தோஷச் செய்தி வரும் நாள். இழுபறியான விஷயம் முடியும்.

பூராடம்: நேற்றைய பிரச்னை இன்று நல்ல முடிவிற்கு வரும்.

உத்திராடம் 1: வாக்குவாதத்தைத் தவிர்ப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: எந்த விஷயத்திலும் தாமதங்கள் இருக்கும். பொறுமை தேவை.

திருவோணம்: பேச்சால் நன்மை வரும். படபடப்பின்றி செயல்படுங்கள்.

அவிட்டம் 1,2: குடும்ப ஒற்றுமை உங்களால் மேம்படும். செல்வம் சேரும்.

கும்பம்:

அவிட்டம் 3,4: உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும் நாள்.

சதயம்: உங்களின் எண்ணம் நிறைவேறும். தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பூரட்டாதி 1,2,3: சகபணியாளர்களுடன் கனிவாகப் பேசுவது நல்லது.

மீனம்: 

பூரட்டாதி 4: கடமை தவறாமல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

உத்திரட்டாதி: தடைப்பட்ட வருமானம் தானாகவே வந்துசேரும்.

ரேவதி: பேச்சிலும், செயலிலும் கவனமாக இருந்தால் பிரச்னை இருக்காது.