இலங்கையில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு! வீட்டை விட்டு வௌியேறும் போது அவதானம்

Yuga
4 years ago
இலங்கையில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு! வீட்டை விட்டு வௌியேறும் போது அவதானம்

முகக் கவசம் அணியாதோர் தொடர்பில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை பொலிஸாரால் இன்று சனிக்கிழமை(14.08.2021) முன்னெடுக்கப்படவுள்ளதாகப் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கமைய பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் நடமாடும் நபர்கள் பிடி ஆணையின்றி கைது செய்யப்படுவர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

எனவே எக்காரணம் கொண்டும் முகக் கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்அஜித் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டார்இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால், முகக் கவசம் இல்லாதவர்களுக்கும், சரியாக முகக் கவசம் அணியாதவர்களுக்கும் இன்று முதல் சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும்.

பொது இடத்தில் முகக் கவசம் அணியாத நபர் தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படலாம்.

முகக்கவசம் அணியாதவர்கள் இன்று முதல் கைது

அத்தகைய குற்றத்தை செய்யும் ஒருவரை பிடிஆணை உத்தரவு இல்லாமல் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் உள்ளன.

இந்த சட்டத்தின் கீழ் முகக்கவசம் அணியாததாலும், சரியான முறையில் முகக்கவசங்களை அணியாததாலும் கடந்த அக்டோபரில் இருந்து 53,000 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4