கொழும்பு நுழைவாயில் பூட்டு : மாற்று வீதிகள் அறிவிப்பு

#Colombo
Yuga
4 years ago
கொழும்பு நுழைவாயில் பூட்டு : மாற்று வீதிகள் அறிவிப்பு

களனி பாலத்தின் அபிவிருத்தி திட்டமொன்று காரணமாக கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இன்று (14) அதிகாலை 5 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை இந்த வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதன்படி, களனி சுற்றுவட்டம் முதல் ஒருகொடவத்தை வரையான கொழும்புக்குள் பிரவேசிக்கும் வீதியே இவ்வாறு மூடப்பட்டுள்ளது.

கொழும்புக்குள் பிரவேசிக்கும் வாகனங்கள், களனி சுற்று வட்டத்தின் ஊடாக ஹிங்குருகடே சந்திக்கு பிரவேசித்து, ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, ஆமர்வீதி சந்தி, மகா வித்தியாலய மாவத்தை ஊடாக புறக்கோட்டைக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன். ஆமர்வீதி, பஞ்சிகாஹவத்தை ஊடாக பொரள்ளைக்கு செல்ல முடியும் என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதேவேளை, கொழும்பிலிருந்து வெளியேறும் வாகனங்கள்,  ஒருகொடவத்தை சந்தியிலிருந்து களனிதிஸ்ஸ சுற்றுவட்டம் ஊடா பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4