இலங்கையில் சில உணவுப் பொருட்களுக்கு விசேட வரி!

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில் சில உணவுப் பொருட்களுக்கு விசேட வரி!

உணவு பொருட்கள் சிலவற்றுக்கு விசேட வியாபார பண்ட வரி விதிக்க நிதியமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் எதிர்வரும் ஒரு வருடத்துக்கு அமுலாகும் வகையில் குறித்த வரி விதிக்கப்பட்டுள்ளது என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2007ஆம் ஆண்டு 48ஆம் இலக்க விசேட பொருட்கள் வரி சட்டத்தின் பிரகாரம் இவ்வாறு வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு கிலோ கருவாடு மற்றும் நெத்தலி ஆகியவற்றுக்கு 100 ரூபாய் வரியும் வெந்தயம் ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபாய் வரியும் குரக்கன் மா ஒரு கிலோவிற்கு 150 ரூபாய் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடுகு ஒரு கிலோ கிராமுக்கு 62 ரூபாய் வரியும் உப்பு ஒரு கிலோ கிராமுக்கு 40 ரூபாய் வரியும் பட்டர் ஒரு கிலோ கிராமுக்கு 880 ரூபாய் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4