இலங்கையில் பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை! அதிகரிக்கப்படுமா விலை?

#SriLanka
Yuga
4 years ago
இலங்கையில்  பால்மா இறக்குமதியாளர்களின் புதிய கோரிக்கை! அதிகரிக்கப்படுமா விலை?

பால்மா இறக்குமதியாளர்கள் , ஒரு கிலோவுக்கு குறைந்தது 260 ரூபாய் விலை அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எனினும் முன்னதாக, ஒரு கிலோவுக்கு 350 ரூபாய் விலை உயர்வை தான் நாடினர்.

அத்துடன் , துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி, இறக்குமதியாளர்கள் சுங்க வரிகளை அரசாங்கம் தள்ளுபடி செய்ய முன்வந்ததை வரவேற்றனர்.

மேலும், உலக சந்தையில், ஒரு டன் பால்மா விலை 4,300 அமெரிக்க டொலராக காணப்பட்டது. ஆனால் இப்போது 3,800 அமெரிக்க டொலராக குறைந்துள்ளது.

இதனால் உள்ளூர் சந்தையில் எங்களால் இலாபம் ஈட்ட முடியாது என தெரிவித்துள்ளனர்.
மேலும், வரிச்சலுகையை தள்ளுபடி செய்வதன் மூலமும், உலகச் சந்தையில் விலை வீழ்ச்சியின் மூலமும், பால்மா விலையை இன்னும் 260 ரூபாய் உயர்த்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, வரி விலக்கின் தாக்கம் ஒரு கிலோவுக்கு 35 ரூபாய் மட்டுமே இலாபம் இருக்கும் என ஒரு தொழில்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4