ராகுல் காந்தி, காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன

Reha
3 years ago
ராகுல் காந்தி, காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் செயல்பாட்டுக்கு வந்தன

முடக்கப்பட்டிருந்த ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரசார் டிவிட்டர் கணக்குகள் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.

சமீபத்தில் டெல்லியில் பாலியல் ரீதியாக துன்புறுதப்பட்ட ஒரு சிறுமியின் குடும்பத்தை சந்தித்தார் ராகுல்காந்தி. அந்த சந்திப்பின் படத்தை ராகுல் காந்தி தன் ட்விட்டரில் கணக்கில் பகிர்ந்து இருந்தார்.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் பாதிக்கப்பட்டவரை அடையாளம் காட்டக்கூடாது என்ற சட்டத்தின்கீழ் ராகுல் குறித்து ட்விட்டரில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து அவரது கணக்கு ட்விட்டரால் முடக்கப்பட்டது.

இதையடுத்து, ராகுல்காந்தி வெளியிட்ட ஒரு வீடியோ அறிக்கையில் ட்விட்டர் பக்கச்சார்புடைய தளம் என்றும், அது இந்தியாவின் அரசியல் நடைமுறையில் குறுக்கிடுகிறது என்றும் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், ராகுல்காந்தியின் ட்விட்டர் கணக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டு இருக்கிறது என ஏ.என்.ஐ முகமையில் செய்தி வெளியாகியுள்ளது.

இது ட்விட்டர் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தரப்பில் இருந்தும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பலரின் ட்விட்டர் கணக்குகளும் இன்று காலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தன.