20000 பேருக்கு புகலிடம் வழங்கவுள்ள கனடா

#Canada
Nila
4 years ago
20000 பேருக்கு புகலிடம் வழங்கவுள்ள கனடா

தலிபான்களின் அச்சுறுத்தலில் இருக்கும் சுமார் 20000 பேருக்கு கனடா புகலிடம் வழங்க உள்ளது.

பெண் தலைவர்கள்,மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் இந்த தீர்மானத்தை கனடா எடுத்துள்ளதாக குடிவரவு அமைச்சர் மெக்ரோ மென்டிசினோ குறிப்பிட்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக மொழிபெயர்ப்பாளர்களாக,தூதரக ஊழியர்களாக, கனேடிய அரசாங்கத்திற்கு சேவையாற்றியவர்கள் மற்றும் அவர்களது குடுத்பத்தவர்களை  ஆயிரம் ஆப்கானியர்களை வரவேற்பதாக நேற்றைய  ஊடக சந்திப்பின் போது அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலிபான்கள் ஆப்கானின் பெரும்பாலான பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நிலையில் பெருமளவான மக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் எப்போது இவர்கள் நாட்டுக்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறித்த காலவரையறையை அவர் தெரிவித்திருக்கவில்லை.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4