15.08.2021 இன்றைய ராசி பலன்
மேஷம்:
அசுவினி: ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருப்பது அவசியம்.
பரணி: வெளிநாட்டுத் தொடர்பு சந்தோஷத்தை அளிக்கும்.
கார்த்திகை 1: நல்ல மனிதர்களின் உதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
ரிஷபம்:
கார்த்திகை 2,3,4: புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். மனமகிழ்ச்சி உண்டு.
ரோகிணி: நண்பர்களுக்கு இடையே இருந்த பிரச்னை தீர்ந்து ஒற்றுமை மீளும்.
மிருகசீரிடம் 1,2: நல்ல விஷயம் நடப்பதால் குடும்ப மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுனம் :
மிருகசீரிடம் 3,4: எதிர்பார்த்த தொகை வரும். புண்ணியச் செயல் செய்வீர்கள்.
திருவாதிரை: உழைப்பு கூடும் வியாபாரத்தில் லாபம் சற்றே உயரும்.
புனர்பூசம் 1,2,3: பணியில் இருந்த சிக்கல் தீரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
கடகம்:
புனர்பூசம் 4: மேலதிகாரிகளிடம் கோபம் காட்ட வேண்டாம்.
பூசம்: திருப்திகரமான நாள். வேலைச்சுமை சற்றுக் குறையும்.
ஆயில்யம்: பொது வாழ்வில் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.
சிம்மம்:
மகம்: உங்கள் நிலையில் உயர்வு கிடைக்கும் நாள். ஆரோக்யம் மீளும்.
பூரம்: கடினமான விஷயங்களையும் எளிதாக முடித்து மகிழ்வீர்கள்.
உத்திரம் 1: உங்களுக்குக் கீழ் வேலை பார்ப்பவரின் நிலையை உயர்த்துவீர்கள்.
கன்னி:
உத்திரம் 2,3,4: உங்களால் பிறர் பயன் அடைவர். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அஸ்தம்: பணவரவு உண்டு. பழைய நண்பர் ஒருவர் தேடி வருவார்.
சித்திரை 1,2: நண்பர் ஒருவருக்கு உங்களால் உயர்வு வரும்.
துலாம்:
சித்திரை 3,4: புதிய விஷயம் கற்று குடும்பத்தினரை அசத்துவீர்கள்.
சுவாதி: உயரதிகாரி அதிசயிக்கும் படி நடந்து கொள்வீர்கள்.
விசாகம் 1,2,3: சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். உங்களின் திறமை வெளிப்படும்
விருச்சிகம்:
விசாகம் 4: ஆடை, ஆபரணம் சேரும். தாயாரின் உடல்நிலை மேம்படும்.
அனுஷம்: குழந்தைகளின் செயல் ஒன்றால் குடும்பம் மகிழும்
கேட்டை: அரசாங்கத்தால் நன்மைகள் உண்டு. வழக்குகள் முடியும்.
தனுசு:
மூலம்: சுற்றி இருப்பவர்களை புரிந்து கொள்ளும் வாய்ப்பு வரும்.
பூராடம்: பொறுமையின்றி பொங்கி எழுந்து வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.
உத்திராடம் 1: யாரோடும் வன்மம் வேண்டாம். தன்னம்பிக்கையை கூட்டுங்கள்.
மகரம்:
உத்திராடம் 2,3,4: வெறுத்து ஒதுக்கிய நண்பர்கள் வந்து உதவி கேட்பார்கள்.
திருவோணம்: முயற்சி வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டும்.
அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். திடீர் யோகம் கிட்டும்.
கும்பம்:
அவிட்டம் 3,4: அக்கம் பக்கத்தினரின் ஆதரவு உண்டு. பெரியோரின் ஆசி கிடைக்கும்.
சதயம்: உண்மையும், உழைப்பும் குறையாமல் இருந்தால் வெல்வீர்கள்.
பூரட்டாதி 1,2,3: இளைஞர்கள் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
மீனம்:
பூரட்டாதி 4: எந்தச் சூழலிலும் உங்கள் கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு.
உத்திரட்டாதி: வழக்கமான சுறுசுறுப்பு குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
ரேவதி: திட்டமிட்ட விஷயங்கள் பெரும்பாலும் தடையின்றி முடியும்.