இலங்கையில் கொரோனா அதிகரிப்பால் தானாக முடங்கிய 3 நகரங்கள்

#Colombo #Lockdown #Curfew #Corona Virus
Nila
4 years ago
இலங்கையில் கொரோனா அதிகரிப்பால் தானாக முடங்கிய 3 நகரங்கள்

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மூன்று நகரங்கள் தாமாகவே முடங்கிய நிலைக்கு சென்றுள்ளன.

இதன்படி கம்பஹா – மரதஹமுல்ல நகரம் நாளை திங்கட்கிழமை முதல் ஒருவாரத்திற்கு மூடப்படவுள்ளது.

அம்பலந்தோட்டை நகரம் இன்று முதல் மறு அறிவிப்பு வெளியாகும் வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோன்று அனுராதபுரம் – கெக்கிராவ நகரத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் வரும் 27ம் திகதி வரை மூடப்பட்டுள்ளன.

இதேவேளை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கொழும்பு நகரம் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 இது மட்டுமல்லாமல் நாட்டில் பல இடங்கலின் மக்கள் நடந்து செல்லும்போதே வீழ்ந்து இறப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.

இலங்கையில் போர் நடந்த சூழலைவிட படு மோசமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

 அந்த வகையில் பல ஆன்மீகவாதிகள், பொது தொண்டர்கள் தமது கவலைகளையும், மக்களுக்கான அறிவுறுவுரைகளையும் கூறி வருகிறனர்.

பல புலம்பெயர் உறவுகள், பொது தொண்டு நிறுவனங்கள் உதவிகளை வழங்க ஆயத்தமாகி வருகிற‌னர்.

உறவுகளே நீங்களும் உங்கள் உறவுகளுக்கு உதவ ஆயத்தம் ஆகுங்கள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4