உயர்தர மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி

#Death #SriLanka #Police
Nila
4 years ago
உயர்தர மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி பலி

குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மொனராகல, புத்தள கட்டுகஹகல்கே குளத்தில் நேற்று நண்பகல் நண்பர்கள் மூவர் நீராட சென்ற சந்தர்ப்பத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் பெற்றோர்கள் வாங்கி கொடுத்த மோட்டார் சைக்கிளில் குறித்த மாணவர்கள் நீராடுவதற்காகச் சென்றுள்ளனர்.

எனினும், நேற்று இரவு வரை அவர்கள் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அவர்களைத் தேடியதில் அவர்கள் பயணம் செய்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் புத்தள கட்டுகஹகல்கே குளத்திற்கு அருகில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து,  பொலிஸார் குறித்த மாணவர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

நீரில் மூழ்கிய மூன்று மாணவர்களின் உடல்கள் ஏரியின் அடிப்பகுதியில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு உயிரிழந்தவர்கள்  மொனராகலை மகாநாம தேசிய பாடசாலையின் உயர்தர மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4