மற்றுமொரு திரிபு நாட்டில் உருவாகும் அபாயம்

#Covid 19 #Covid Vaccine #Covid Variant
Nila
4 years ago
மற்றுமொரு திரிபு நாட்டில் உருவாகும் அபாயம்

டெல்டா கொரோனா வைரஸ் திரிபு விகாரமடைந்து, மற்றுமொரு திரிபு நாட்டில் உருவாகும் அபாயம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டெல்டா திரிபு மிகவும் மோசமானதாகும். சில நாடுகளில் டெல்டா திரிபு விகாரமடைந்து புதிய திரிபுகள் உருவாகியுள்ளன. டெல்டா ப்ளஸ் என்ற ஒரு திரிபு உருவாகியுள்ளது.

மருத்துவ ஆய்வுகளின் அடிப்படையில், இதுபோன்ற புதிய திரிபுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

இதுவரையில் நாட்டில் அவ்வாறான திரிபு ஏற்படவில்லை.

எனினும், இந்தப் பெருந்தொற்றில் எதிர்காலத்தில் புதிய திரிபு ஏற்படுவதை தவிர்க்க முடியாது. 

அதற்கும் தயாராக இருக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதேநேரம், அடுத்த இரண்டு வாரங்களில், தொற்றாளர்களின் எண்ணிக்கை, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளமையால், அந்தக் காலம் மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4