வீட்டிலேயே சுவையான K F C சிக்கன் செய்யும் முறை
Mugunthan Mugunthan
3 years ago
பொதுவாக அசைவ பிரியர்கள் சிக்கன் என்றாலே K F C சென்று சிக்கன் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், அது போன்ற சிக்கனை நாம் வீட்டிலே எளிமையாக சமைக்கலாம். அது பற்றி இந்த பதிவில் காண்போம்
K F C சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
- சிக்கன் லெக் பீஸ் – 4
- பூண்டு பேஸ்ட் – சிறிதளவு
- உப்பு – சிறிதளவு
- தயிர் – தேவையான அளவு
- மைதா – 100 கிராம்
- மிளகுத்தூள் – சிறிதளவு
- மிளகாய்த்தூள் – சிறிதளவு
- முட்டை – 1
- கார்ன் மீல்ஸ் – 100 கிராம்
K F C சிக்கன் செய்முறை:
- ஒரு பவுலில் தயிரை ஊற்றி அதில் தண்ணீர் சேர்த்து மோர் போன்று தயார் செய்து அதில் மைதாவினை சேர்த்து அதனுடன் பூண்டு பேஸ்ட் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
- அதில் சிக்கனை போட்டு அதனை அப்படியே 2 மணிநேரம் வரை அப்படியே வைக்கவும்.
- பிறகு ஒரு தட்டில் மைதா, மிளகுத்தூள், மிளகாய்த்தூள் மற்றும் கார்ன் மீல்ஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக்கொள்ளவும்.
- பிறகு மற்றொரு பவுலில் முட்டையை உடைத்து நன்றாக கலக்கவும்.
- பிறகு ஊற வைத்த சிக்கனை இந்த முட்டையில் நனைத்து கலந்து வைத்து மாவில் உருட்டி மீண்டும் முட்டையில் நனைத்து அதனை வேறொரு தட்டில் வைக்கவும்.
- இவ்வாறாக அனைத்து சிக்கனையும் மேற்கூறியபடி தயார் செய்து வைக்கவும்.
- பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தயார் செய்த சிக்கனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான K F C சிக்கன் தயார்.