16.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
16.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: இளைஞர்களின் நீண்ட கால முயற்சி வெற்றி பெறும்.

பரணி: சிலர் உங்களை சீண்டுவார்கள். உணர்ச்சிவசப்பட வேண்டாம்.

கார்த்திகை 1: புது அனுபவம் கிடைத்து வாழ்வில் பாடம் பெறுவீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: பணியிடத்தில் திட்டமிட்ட விஷயம் தடையின்றி முடியும்

ரோகிணி: வீட்டிலும் பணியிடத்திலும் வளைந்து கொடுக்க வேண்டும்.

மிருகசீரிடம் 1,2: தீய எண்ணங்களை முறியடிக்கும் உறுதி பெறுவீர்கள்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: உழைப்பால் உயரும் நாள். சுபநிகழ்ச்சி ஏற்பாடாகும்.

திருவாதிரை: கலவையான பலன்கள் பெறுவீர்கள். அதிர்ஷ்டம் உதவும்.

புனர்பூசம் 1,2,3: உண்ண, உறங்க நேரமின்றி உழைப்பீர்கள். உற்சாகம் கூடும்.

கடகம்: 

புனர்பூசம் 4: பாசத்துக்குக் கட்டுப்படுவீர்கள். செயல்பாட்டில் சுறுசுறுப்பு கூடும்.

பூசம்: அனுபவசாலிகளின் ஆலோசனையுடன் முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

ஆயில்யம்: வியாபாரிகளுக்கு இன்றைய தினம் லாபகரமாக அமையும்.

சிம்மம்: 

மகம்: புதிய விஷயங்களுக்காக நீங்கள் செய்த முயற்சிகள் வெற்றியாகும்.

பூரம்: புதிய நட்பால் பிரச்னைகள் ஏற்படாமல் கவனம் தேவை.

உத்திரம் 1: புதுத் தொடர்பு கிடைக்கும். நன்மை நிகழ நல்லவர் உதவுவார்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: பகை தீர்வதற்காக எடுத்த முயற்சியில் நிம்மதி ஏற்படும்.

அஸ்தம்: எது பற்றியும் பயம் வேண்டாம். குழந்தைகளின் வாழ்வு மேம்படும்.

சித்திரை 1,2: எதிர்பாராத சந்திப்பு ஒன்று நிகழும். திறமையால் சாதிக்கும் நாள்.

துலாம்: 

சித்திரை 3,4: கலைத்துறையினருடன் நட்பாகும் வாய்ப்பு கிடைக்கும்.

சுவாதி: முன் எப்போதோ மறுக்கப்பட்ட உரிமை ஒன்று இன்று கிடைக்கும்.

விசாகம் 1,2,3: தடுமாற்றம் ஏற்படும்போது உடன்பிறந்தவர் துணைபுரிவார்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பணியாளர்கள் முயற்சியுடன் கூடிய உழைப்பால் உயரும் நாள்.

அனுஷம்: தாயாரின் அறிவுரையால் குழப்பம் ஒன்று தீரும்.

கேட்டை: திறமையை நிரூபிப்பீர்கள். வரவு கணிசமாக அதிகரிக்கும்.

தனுசு: 

மூலம்: அலட்சியம் காரணமாக ஏமாறாமல் கவனமாக இருங்கள்.

பூராடம்: புது நபர் அறிமுகம் பற்றி கவனம் தேவை. கடன் வாங்குமுன் யோசியுங்கள்

உத்திராடம் 1: குடும்ப நபர்களிடையே அனுசரித்து போயாக வேண்டும்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: சிறு வெற்றி ஒன்று ஏற்பட்டுச் சந்தோஷம் கூடுதலாகும்

திருவோணம்: கொடுத்த பணத்தைத் திருப்பிப் பெறும்போது கடுமை வேண்டாம்

அவிட்டம் 1,2: எதிர்பார்த்திருந்த உதவி நேரம் தப்பாமல் கிடைத்துவிடும்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: புதிய கோணத்தில் சிந்தித்து வெற்றி அடைவீர்கள்.

சதயம்: சுபநிகழ்ச்சி ஒன்றின் மூலம் நண்பர், உறவினர் தொடர்பு அதிகரிக்கும்

பூரட்டாதி 1,2,3: பணியாளர்கள் கூடுதல் பொறுப்பு சுமக்க வேண்டி வரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: செலவினங்கள் அதிகரிக்கும். ஆடம்பரத்தில் நாட்டம் கூடும்.

உத்திரட்டாதி: உங்களின் தனிப்பட்ட ரகசியம் கசியாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

ரேவதி: பணியில் கவனமும், விரைவும் கூடும். உற்சாகம் குறையாது.