அவுஸ்திரேலிய சுப்பர் மார்க்கட்டின் மசாலா தட்டிலிருந்து மலைப்பாம்பு!

அவுஸ்திரேலிய சுப்பர் மார்க்கட்டின் மசாலா தட்டிலிருந்து மலைப்பாம்பு!

சிட்னி நகரின் வுல்வேர்த் சுப்பர் மார்க்கட்டிற்கு சென்ற பெண்ணை அங்கிருந்த மசாலா தட்டிலிருந்து 3 மீற்றர் நீள மலைப்பாம்பு ஒன்று வெளியே வந்து எட்டிப்பார்த்துள்ளது.

இந்த சுப்பர் மார்க்கட் பத்தைகள் சுற்றியிருந்த இடத்தில் அமைந்திருந்து என்றாலும் இந்த பெண்ணுக்கு இந்தப்பாம்பு எட்டிப்பார்த்தது ஒரு அதிசயம் தான். 

அவர் இது சம்பந்தமாக தெரிவிக்கையில் எனது தலையை திருப்பியபோது இந்த பாம்பானது எனது முகத்திற்கு 20 சென்ரிமீ்ற்றர் துாரத்தில் தான் இருந்தது. ஆனாலும் இது விஷமற்றது.

முழு நேரமும் இந்தப்பாம்பு என்னைப்பார்த்த படியே இருந்து என்னை வெளியே எடுப்பீர்களா? எனக் கேட்பது, போலிருந்தது எனக்கு . என்று இவர் மேலும் தெரிவித்தார்.

கடைசியில் பணியாட்களுடன் இவர் கொண்டுவந்த பை ஒன்றினுள் இந்த பாம்பை இட்டு பின்னர் வீடு சென்று அப்பால் ஒரு பத்தைக்குள் விட்டுவிட்டார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4