கோவிட் தொற்றுக்குள்ளாகி 34 வயதான வைத்தியர் மரணம்

Prathees
4 years ago
கோவிட் தொற்றுக்குள்ளாகி   34 வயதான வைத்தியர் மரணம்

ராகம வைத்தியசாலையில் பணியாற்றிய வைத்தியர்களில் ஒருவர்கோவிட் தொற்றுக்கு உள்ளாகி இன்று (18) காலை மரணமடைந்துள்ளார்.

ராகம வைத்தியசாலையில் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை பிரிவில் கடமையாற்றிய 34 வயதான முகம்மது ஜனன் என்ற வைத்தியரே இவ்வாறு மரணமடைந்துள்ளார்.

கொ​ரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேற்படி வைத்தியர் ராகம வைத்தியசாலையின் கொரோனா விடுதியில் சிகிச்சைப்பெற்றுவந்தார்.

அதன்பின்னர், அவசர சிகிச்சைப் ​பிரிவில் அனுமதிக்கப்பட்டு, இரண்டு வாரங்கள் அங்கு சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இன்று காலை மரணமடைந்த அந்த வைத்தியர், கொரோனா தடுப்பூசிகள் இரண்டையும் ஏற்றிக்கொள்ளாத ஒருவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4