எலிகளை தாக்கும் ஆல்பா, பீட்டா, காம்மா வைரஸ்கள்-ஆய்வில் அதிர்ச்சி

Keerthi
4 years ago
எலிகளை தாக்கும் ஆல்பா, பீட்டா, காம்மா வைரஸ்கள்-ஆய்வில் அதிர்ச்சி

ஆல்பா, பீட்டா, காம்மா போன்ற வைரஸ்கள் எலியை தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே நேரத்தில் டெல்டா வைரசால் எலிகளை தாக்க முடியவில்லை.

ஆடு, மாடுகள், குதிரை போன்ற விலங்குகளை கொரோனா வைரஸ் தாக்கினால் தடுப்பூசி மூலமோ அல்லது அவற்றை அழிப்பதன் மூலமோ கட்டுப்படுத்தி விடலாம்.

ஆனால் எலிகளுக்கு பரவினால் அதை கட்டுப்படுத்துவது கடினம். எனவே இது விஞ்ஞானிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காமன்வெல்த் அறிவியல் தொழில் ஆராய்ச்சி அமைப்பு, ஆஸ்திரேலியாவில் உள்ள தேசிய சயின்ஸ் ஏஜென்சி ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டது.

இந்த ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்று இருந்த பெங்களூரை சேர்ந்த பேராசிரியர் வாசன் கூறும்போது,

“கொரோனா வைரசின் தன்மை தொடர்பாக நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நாங்கள் மேற்கொண்டோம்.

அதில் எலிகளுக்கு பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தடுப்பது தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது” என்று கூறினார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4