20.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
20.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: கடந்த இரண்டு நாட்களாக இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

பரணி: தாமதமான வேலைகள் இன்று முடியும். நிம்மதி அதிகரிக்கும்.

கார்த்திகை 1: பயம் நீங்கும். புதியவர்கள் நண்பர்களாகி நன்மை செய்வர்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

ரோகிணி: மனதிற்கு பிடித்தவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள்.

மிருகசீரிடம் 1,2: ஓய்வெடுக்க முடியாத படி பணிச்சுமை அதிகரிக்கும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

திருவாதிரை: தவறுகளை சுட்டிக் காட்டி சச்சரவுகளில் சிக்க வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: பணியாளர்கள் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

கடகம்: 

புனர்பூசம் 4: இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவதால் பிரச்னை இல்லை.

பூசம்: சில விஷயங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும்.

ஆயில்யம்: வீண் அலைச்சல், செலவுகள் வருவதற்கு வாய்ப்புள்ளது.

சிம்மம்: 

மகம்: கலைத்துறையினருக்கு இன்று புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பூரம்: சந்தர்ப்பங்களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள்.

உத்திரம் 1: பெற்றோரின் ஆதரவு கூடும். காணாமல் போன பொருள் கிடைக்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: சகபணியாளர்கள் உங்களை பாராட்டுவர். நன்மை நடக்கும் நாள்.

அஸ்தம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சித்திரை 1,2: உறவினர்கள், நண்பர்கள் உங்கள் உதவியை நாடி வருவர்.

துலாம்: 

சித்திரை 3,4: புதிய நண்பர்கள் உங்களைத் தேடி வருவார்கள். கலகலப்பான நாள்.

சுவாதி: முயற்சியால் முன்னேறுவீர்கள். சிரமம் இருந்தாலும் திருப்தியான நாள்.

விசாகம் 1,2,3: நண்பர் மூலம் ஒரு திடீர் நன்மை கிடைக்கும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: பிறரால் செய்ய முடியாத ஒரு விஷயத்தைச் செய்து முடிப்பீர்கள்.

அனுஷம்: எதிர்பார்த்த விஷயம் அரசாங்க உதவியுடன் அனுகூலமாக முடியும்.

கேட்டை: தடைப்பட்டு வந்த விஷயம் இன்று நல்லபடியாக முடியும்.

தனுசு: 

மூலம்: செல்வம் சேரும். பொறுமையுடன் எதையும் செய்ய வேண்டும்.

பூராடம்: யாருடைய துாண்டுதலாலும் தவறு செய்ய வேண்டாம்.

உத்திராடம் 1: பேச்சில் கவனம் தேவை. நண்பர்களுக்கு உதவி செய்வீர்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: வியாபாரிகள் புதிய இனங்களில் முதலீடு செய்வதை தவிர்க்கவும்.

திருவோணம்: போராடி வெல்வீர்கள். சக ஊழியரிடம் விவாதம் செய்ய வேண்டாம்.

அவிட்டம் 1,2: பிறரின் உணர்வை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவீர்கள்.

கும்பம்: 

அவிட்டம் 3,4: கடுமையான உழைப்பால் அனைவரையும் வியக்க வைப்பீர்கள்.

சதயம்: மிகுந்த முயற்சி காரணமாக கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

பூரட்டாதி 1,2,3: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களின் மதிப்பு உயரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: எடுத்த செயல்களில் இருந்து வந்த சுணக்கம் தீரும்.

உத்திரட்டாதி: நிறையச் செலவானாலும் அவை சந்தோஷம் அளிக்கும்.

ரேவதி: உங்களின் திறமைகளுக்கேற்ப கூடுதல் பொறுப்பு வரும்.