இந்தியாவில் உலர்பழங்கள் விலை திடீர் ஏற்றம்!

இந்தியாவில் உலர்பழங்கள் விலை திடீர் ஏற்றம்!

ஆப்கானிஸ்தானில் போரின் மூலம் ஆட்சி பொறுப்பேற்ற தாலிபான்களின் செயல்பாடுகளால் இந்தியா  உடனான வர்த்தகம் முடங்கியுள்ளது.கடந்த நிதியாண்டில் இந்தியா 6136 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.அதே போல சுமார் 3,786 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை இயக்குமதி செய்துள்ளது.ஆப்கனின் வர்த்தக வாய்ப்புகளில் தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சந்தையாக டெல்லி திகழ்கிறது.

அங்கிருந்து பழங்கள், உலர் பழங்கள், காய்கறி சாறுகள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் டெல்லிக்கு இயக்குமதி ஆகிறது.அதே போல இந்தியாவில் இருந்து சர்க்கரை, மருந்து பொருட்கள், ஆடைகள் உள்ளிட்டவை அதிகளவில் ஆப்கனுக்கு ஏற்றுமதி ஆகிறது.இவற்றில் பெரும்பாலும் பாகிஸ்தானில் இருந்து 2 மிக முக்கிய வர்த்தக சாலை போக்குவரத்து வழிகள் மூலமே நடைபெற்று வந்தது. இந்த நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள தாலிபான்கள், 2 வழிகளையும் அடைத்துள்ளனர்.

இதனால் இந்தியாவில் இருந்து ஆப்கனுக்கு இறக்குமதி வர்த்தகம் முழுமையாக முடங்கி இருப்பதாக இந்திய ஏற்றுமதி சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.துபாய் மற்றும் சில சர்வதேச வழிகள் மூலம் ஏற்றுமதி பகுதியளவு தொடர்வதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.ஆப்கனில் இருந்து இறக்குமதி முடக்கி இருப்பதால் டெல்லியில் உலர் பழங்கள் விலை திடீரென பன்மடங்கு அதிகரித்துள்ளது.

85% உலர் பழங்கள் ஆப்கானிலிருந்துதான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த நிறுத்தத்தால் இந்தியாவில் உலர் பழங்கள் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஏற்றுமதி அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.கிலோ ஒன்றுக்கு ரூ. 500க்கு விற்பனையான பாதாம் தற்போது ரூ.1000ஆக அதிகரித்து இருப்பதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர்.பிஸ்தா மற்றும் அத்தி விலையும் ஏற்றம் கண்டுள்ளதாக வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.