சுக் ஏரியை பாதுகாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

சுக் ஏரியை பாதுகாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

சுவிற்சலாந்திலுள்ள சுக் ஏரி மற்றும் ஏனைய ஏரிகள் அதிகரித்த கால்நடைகளின் இறக்குமதி செய்யப்பட்ட கொம்போசால் மாசடைய செய்யப்பட்டுள்ளது.

சுக் ஏரியில் தற்போது ஒரு கன மீற்றர் நீரில் 80 மில்லிகிராம் பொசுபரசு கலந்துள்ளது. சாதாரணமாக சட்டத்தின் படி இது 30 மில்லிகிராமாக இருக்க வேண்டும்.

ஏரிகளில், பொசுபரசு அல்காக்களை வளர்க்க உதவும். அல்காக்கள் இறந்தால் அவை பங்கசு மற்றும் பற்றீரியாக்களினால் தாக்கப்பட்டு விடும். இதற்கு அதிகளவு ஒட்சிசன் தேவை. இந்த ஒட்சிசன் நீரில் அற்றுப்போகும் போது அதிலுள்ள மீன் மற்றும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும்.

சுக்கில் கால்நடையாளர்களின் இச்செயலை தடுக்க திட்டம் ஒன்று வகுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அதை கைவிட்டுவிட்டார்கள்.

இந்த திட்டத்தின்  ஒரு உறுப்பு ஏற்கனவே இருக்கும் பண்ணை வடிகாலின் முடிவில் மணல் வடிகட்டிகளைச் சேர்ப்பது ஆகும். இதற்கு எவ்வளவு செலவாகும் என அரசாங்கத்தால் கூறமுடியாது உள்ள போதும் பண்ணையாளர்கள் இதற்கு செலவு செய்ய விரும்பவில்லை.

சூழல் அதிகாரிகளோ இந்த கால்நடைகளின் அளவை குறைப்பது பற்றி பண்ணையாளர்களை கேட்கவுள்ளனர். அதே வேளை சூற்றாடல் நிறுவனங்களும் உள்ளுர் அரசியல்வாதிகளும் கால்நடையாளர்களை இந்த மாசுபடுத்தலைத் தவிர்க்கும் அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4