21.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
21.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: நிம்மதி அடைவீர்கள். பயம் தீரும். சாதனைக்கு முயல்வீர்கள்.

பரணி: சேமிப்பு உயரும். புதிய திட்டம் ஒன்று நிறைவேறும்.

கார்த்திகை 1: உயர் கல்வி, பணிநிலை குறித்து இன்று யோசிப்பீர்கள்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: முன்பு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்

ரோகிணி: வெளிநாட்டில் உள்ள குழந்தைகளின் மூலம் நல்ல செய்தி வரும்.

மிருகசீரிடம் 1,2: வியாபாரம் சூடுபிடிக்கும். பெண்களின் கவலை தீரும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: உங்களின் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள்.

திருவாதிரை: உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் வீண் பழி சொன்னால் கவலை வேண்டாம்.

புனர்பூசம் 1,2,3: வம்பில் மாட்டும் செயல் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடகம்: 

புனர்பூசம் 4: உங்கள் செயலால் சிரமம் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

பூசம்: பலகாலம் மனதை அரித்துக்கொண்டிருந்த கவலை நீங்கும்.

ஆயில்யம்: மற்றவர் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்னைகள் அகலும்.

சிம்மம்: 

மகம்: உங்களின் பலகாலப் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும்

பூரம்: செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். கனவு நனவாகும்

உத்திரம் 1: தவறைத் திருத்திக்கொள்வது பற்றிய விருப்பம் மேலோங்கும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: கடன் சுமை குறைவதற்கு அக்கறையுள்ளோர் உதவுவர்

அஸ்தம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரலாம். சிக்கல் நீங்கும்.

சித்திரை 1,2: நெருங்கிய நண்பர்களுக்கிடையே மனஸ்தாபங்கள் நீங்கும்.

துலாம்: 

சித்திரை 3,4: வளர்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

சுவாதி: வருங்கால நலன் பற்றிய முயற்சியில் வெற்றி கிட்டும்.

விசாகம் 1,2,3: நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட வாதத்தைத் தீர்த்து வைப்பீர்கள்.

விருச்சிகம்: 

விசாகம் 4: மற்றவர்களுக்கு உதவிகரமாக இருந்து மகிழ்விப்பீர்கள்.

அனுஷம்: சருமம் சம்பந்தப்பட்ட சிரமத்துக்குத் தீர்வு கிடைக்கும்.

கேட்டை: எதுபற்றி பயந்தீர்களோ அந்த விஷயம் நல்லபடியாக முடியும்.

தனுசு: 

மூலம்: ஜாமீன் போட்ட தொகை திருப்பப்பட்டு நிம்மதி தரும்.

பூராடம்: மனச்சுமை குறையும் நாள். உறவினர்களுடன் கவனம் தேவை.

உத்திராடம் 1: பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும்

மகரம்: 

உத்திராடம் 2,3,4: உறவை ஒட்டுவதில் ஆர்வம் கூடும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

திருவோணம்: நவீன பொருட்கள் வாங்குவதில் அதிக செலவு செய்வீர்கள்.

அவிட்டம் 1,2: பெற்றோருக்கு ஏற்பட்ட சிரமம் உங்களால் குறையும்

கும்பம்: 

அவிட்டம் 3,4: பணத்தேவை நிறைவேறும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள்.

சதயம்: வாழ்க்கைத்துணை உங்களை பாராட்டுவார். பழைய பகைவர் மனம் மாறுவார்.

பூரட்டாதி 1,2,3: குழந்தைகளின் நீண்ட கால பிரச்னைகள் தீரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: நண்பர்கள் மூலமாக புதியவரின் அறிமுகம் கிடைக்கும்.

உத்திரட்டாதி: புதிய நபருடன் நட்பை இறுக்க ஆர்வம் காட்டுவீர்கள்.

ரேவதி: புதிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி கற்றுக் கொள்வீர்கள்.