இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை !

#SriLanka #Corona Virus #Covid Vaccine #Covid 19
Yuga
4 years ago
இலங்கையில் மூன்றாவது கொவிட் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை !

சுகாதாரத் துறையின் அனைத்து ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் பெற்றுக் கொடுக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்திற்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

தற்போதைய கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக சுகாதார பிரிவினர் அதிகளவில் தொற்றுக்கு உள்ளாகும் நிலைக் காணப்படுகிறது.

இதன் காரணமாக அவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த சங்கம், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்;தது.

இரண்டாவது தடுப்பூசியை பெற்று 5 மாதங்களின் பின்னர் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை பெற்றுக் கொடுக்க இதன்போது இணக்கம் காணப்பட்டுள்ளது.
 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4