22.08.2021 இன்றைய ராசி பலன்

Reha
3 years ago
22.08.2021  இன்றைய ராசி பலன்

மேஷம்: 

அசுவினி: தாய்வழி உறவினரிடம் இருந்து நல்ல செய்தி ஒன்று வரும்.

பரணி: பங்குச் சந்தையில் முன்பு செய்த முதலீடுகள் லாபம் தரும்.

கார்த்திகை 1: புகழ் பெறுவீர்கள். சிரமமும் சந்தோஷமும் கலந்திருக்கும்.

ரிஷபம்: 

கார்த்திகை 2,3,4: வாழ்க்கைத்துணையின் சகோதரர் உங்களுக்கு உதவி செய்வார்.

ரோகிணி: சாப்பிடவும், துாங்கவும் நேரமின்றி உழைக்க வேண்டி வரும்.

மிருகசீரிடம் 1,2: பிரியமானவர்களோடு இத்தனை நாள் இருந்த பிரச்னைகள் அகலும்.

மிதுனம் : 

மிருகசீரிடம் 3,4: குடும்பத்தில் இருந்து வந்த பணத்தேவை சரியாகும்.

திருவாதிரை: உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சி பற்றிய செய்தி வரும்.

புனர்பூசம் 1,2,3: எதிர்பார்த்தவை நடக்காதது பற்றி விரக்தி நிலை தேவையில்லை.

கடகம்: 

புனர்பூசம் 4: நகைச்சுவை என்ற பெயரில் யாரையும் புண்படுத்த வேண்டாம்.

பூசம்: பிரச்னை பற்றி புலம்ப வேண்டாம். மிக விரைவில் மீளுவீர்கள்.

ஆயில்யம்: மற்றவர்கள் பிரச்னையில் தலையிட்டு அதைச் சரிசெய்வீர்கள்.

சிம்மம்: 

மகம்: உங்கள் நடவடிக்கையால் ஏற்பட்டிருந்த சிரமங்கள் நீங்கும்.

பூரம்: குடும்பத்தில் நிகழும் குதுாகல சம்பவம் மகிழ்ச்சி தரும்.

உத்திரம் 1: நீண்ட நாளைய எண்ணம் ஒன்று நிறைவேறும்.

கன்னி: 

உத்திரம் 2,3,4: பிரச்னையாகும் என்று நினைத்த விஷயத்தில் நலம் ஏற்படும்.

அஸ்தம்: வாழ்வில் நல்ல நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கூடிவரும்

சித்திரை 1,2: சண்டையிட்ட உறவினர் மனம் மாறி சமாதானம் ஆவார்கள்.

துலாம்: 

சித்திரை 3,4: அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் உங்களுக்கு உண்டு.

சுவாதி: சிறு ஆரோக்கியத் தொல்லை வந்து சரியாகும். கவலைகள் குறையும்.

விசாகம் 1,2,3: பயம் நீங்கும். எதிர்பாராத சந்திப்பால் சந்தோஷம் வரும்.

விருச்சிகம்: 

விசாகம் 4: திட்டமிட்ட விஷயம் ஒன்றில் சிறு மாற்றங்களைச் செய்வீர்கள்.

அனுஷம்: உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்

கேட்டை: உங்களின் புகழ் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி மீளும்.

தனுசு: 

மூலம்: குடும்பம் மகிழும். முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்யவும்.

பூராடம்: மகிழ்ச்சி அதிகரிக்கும். நண்பர்களிடம் விட்டுகொடுத்து போவீர்கள்.

உத்திராடம் 1: மற்றவர்களால் பாராட்டப் பெறுவீர்கள். பொறாமையை விடுங்கள்.

மகரம்: 

உத்திராடம் 2,3,4: மற்றவர்களின் விமர்சனத்தைப் புறந்தள்ளி முன்னேறுங்கள்.

திருவோணம்: கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். மனச்சோர்வு நீங்கும்.

அவிட்டம் 1,2: முன்னேறும் எண்ணம் தோன்றும். நிதி நிலையில் மாற்றம் இல்லை.

கும்பம்: 

அவிட்டம் 3,4: கட்டிடப்பணியில் சிறு தடை ஏற்படக்கூடும். கவலை வேண்டாம்.

சதயம்: உங்கள் மீது பெரியவர்களுக்கு இருந்து வந்த கோபம் குறையும்.

பூரட்டாதி 1,2,3: பிள்ளைகளிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.

மீனம்: 

பூரட்டாதி 4: புதிய முயற்சிகளில் தாமதமான வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி: இடமாற்றத்திற்கான வாய்ப்புகள் இப்போதைக்கு இல்லை.

ரேவதி: பணியிடத்தில் பணிவாக இருப்பதால் நற்பெயர் கிடைக்கும்.