இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி

#SriLanka #Covid Vaccine #School #Health #Covid 19
Yuga
4 years ago
இலங்கையில் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகள் ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஒளடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர்களின் சங்கத்தினர் இது தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர்.

அத்தோடு தொற்றா நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 முதல் 18 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துமாறு அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் பைஸர் போன்ற தடுப்பூசியே சிறுவர்களுக்கு பொருத்தமானதென வைத்தியர்கள் குறிப்பிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த விடயம் குறித்து கலந்துரையாடி எதிர்வரும் நாட்களில் தீர்மானமொன்றை எட்டவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை முன்னிலை சுகாதார சேவையாளர்களுக்கு மூன்றாவது தடுப்பூசியை செலுத்துமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பில் விரைவில் தீர்மானமொன்று மேற்கொள்ளப்படும் என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4